106. பா3லிஷ: to பு3த்3தி4மத

2101. பா3லிஷ: = சிறுவன், மூடன்.

2102. பா3ல்யம் = குழந்தைப் பருவம்.

2103. பா3ஷ்ப: = பா3ஷ்பம் = கண்ணீர், நீராவி, இரும்பு .

2104. பா3ஹு: = தோள், மேல் கை.

2105. பா3ஹுக: = குரங்கு, நள மகாராஜா பூண்ட பெயர்.

2106. பா3ஹுல்யம் = அதிகமான, அநேகமான, பலவான.

2107. பாஹ்ய = வெளியில் உள்ள.

2108. பி3டா3ல: = பி3டா3லக: = பூனை.

2109. பி3ந்து3: = துளி, திவலை, சொட்டு, புள்ளி, பூஜ்யம், ஸ்ரீ சக்கரத்தின் மையம், புருவ மத்தி.

2110. பி3ம்ப3: = பி3ம்ப3ம் = நிழல், உருவம், பிரதி பிம்பம், கண்ணாடி.

2111. பி3ம்ப3ம் = கோவைப் பழம்.

2112. பி3லம் = துளை, துவாரம், குழி, பள்ளம், வெடிப்பு, குஹை.

2113. பி3ல்வ: = வில்வ மரம்.

2114. பீ3ஜம் = விதை, உயிர் அணு, மந்திரத்தின் முக்கிய எழுத்து, வீர்யம், ஆரம்பம், தொடக்கம்.

2115. பீ3ப4த்ஸ: = வெறுப்பு, நிந்தனை, ஒரு காவியச் சுவை, அர்ஜுனின் ஒரு பெயர்.

2116. பு3க்க: = இருதயம், மார்பு, இரத்தம், ஒரு அரசனின் பெயர்.

2117. பு3த4: = அறிவாளி, புதன் என்னும் க்ரஹம்.

2118. பு3த்3தி4: = அறிவு, விவேகம், பிரக்ஞை, புத்திசாலித்தனம்.

2119. பு3த்3தி4பூர்வம் = பு3த்3தி4பூர்வகம் = புத்தியை உபயோகித்து.

2120. பு3த்3தி4மத = கற்றறிந்த, கெட்டிக்கார, பகுத்தறிவு உடைய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *