105. ப3லம் to பா3லா

2081. ப3லம் = சாமர்த்தியம், சக்தி, பலம், வீர்யம், சேனை, ரத்தம், உடல், உருவம், பருமன், கொழுத்த தன்மை, கோந்து , ருசி, ரசம், வாசனை, முளை.

2982. ப3ல: = காகம், பலராமன்.

2083. ப3லவத் = பலமுள்ள, சக்தி வாய்ந்த, படை பலம் உள்ள.

2084. ப3லாத்கார: = ஹிம்சிதல், பிடிவாதம், அடம், பலாத்காரம் செய்தல், நியாயம் இல்லாதமுறையில் பலப் பிரயோகம் செய்தல்.

2085. ப3லி: = தேவதைகளுக்கு அர்பணிக்கப்படும் உணவு, காணிக்கை, அக்னியில் இடப்படும் பொருள், யாக பலி, அரசன் மஹா பலி.

2086. ப3லிஷ்ட: = ஒட்டகம்.

2087. ப3லியஸ் = அதிக பலம் பொருந்திய, அதிக மகிமையுடைய.

2088. ப3ஹிஷ்கார: = வெளியே தள்ளுதல், விலக்குதல், ஜாதியிலிருந்து விலக்குதல்.

2089. ப3ஹு = அதிக, ஏராளமான, அனேக, பல, எண்ணற்ற, பெரிய, நிறைந்த.

2090. ப3ஹுதா4 = பலவிதமான, தனித்தனி வகையில்.

2091. ப3ஹுல = அதிகமான, ஏராளமான, பல, கருப்பான.

2092. ப3ஹுவசனம் = பன்மைச் சொல்.

2093. ப3ஹுச’: = மிக அதிகமாக, அடிக்கடி, மறுபடியும் மறுபடியும், சாதரணமாக,

2094. பா3ட4ம் = நிச்சயம் அன்றோ! உண்மைதான், நல்லது, அப்படியா இருக்கட்டும்.

2095. பா3ண: = அம்பு, பசுவின் மடி, ஒரு கவிஞனின் பெயர், ஒரு அசுரனின் பெயர்.

2096. பா3த4: = பா3தா4 = கஷ்டம், வேதனை, அடி, ஆபத்து, பயம், தடை, கெடுதி, நஷ்டம், ஆட்சேபணை.

2097. பா3ந்த4வ: = உறவினன், சுற்றத்தான்.

2098. பா3லக: = சிறுவன், முட்டாள், மோதிரம்.

2099. பா3ல: = குழந்தை, சிறுவன், இளம் பையன், மயிர், வால், மூடன்.

2100. பா3லா = பா3லிகா = சிறுமி, கன்னிப் பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *