104. பா2ல்குன: to ப3ர்ஹிஸ்

2061. பா2ல்குன: = ஒரு மாதத்தின் பெயர், அர்ஜுனன், மருத மரம்.

2062. பு2ல்ல = மலர்ந்த, பரவிய, விஸ்தாரம் அடைந்த, புன்சிரிப்புடன் கூடிய.

2063. பே2ண: = பே2ன: = நுரை, எச்சில், கோழை.

2064. பே2ர: = பே2ரவ: = பே2ரு: = நரி.

2065. ப3க: = கொக்கு, போக்கிரி, ஒரு அசுரன், கபடம் உள்ளவன், குபேரனின் ஒரு பெயர்.

2066. ப3குல = மகிழ மரம்.

2067. ப3குளம் = மகிழம்பூ.

2068. ப3த = துக்கம் / துயரம் / சந்தோஷம் / கருணை / ஆச்சரியம் / அழைத்தல் / கூப்பிடுதல் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.

2069. ப3த3ர: = ப3த3ரிகா = ப3த3ரி: = இலந்தை மரம்.

2070. ப3த3ரம் = இலந்தம் பழம்.

2071. ப3த்3த3 = கட்டப்பட்ட, விலங்கிடப்பட்ட, பிடிக்கப்பட்ட, தடுக்கப்பட்ட, இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட.

2072. ப3தி3ர = செவிடன்.

2073. ப3ந்த4: = கட்டு, முடிச்சு, கை விலங்கு,ரிப்பன், கயிறு, பிடித்தல், கட்டுதல், சிறையிடுதல், சிந்தித்தல், சேர்க்கை, விளைவு, கலவை, நிலை.

2074. ப3ந்த4னம் = முடிச்சு, கட்டு, கை / கால் விலங்கு, தசை, பாட்டி, நாடா, பாலம், அணை.

2075. ப3ந்து4: = உறவினன், நெருங்கியவன், உடன் பிறந்தவன், தாய், தந்தை.

2076. ப3ப்4ரு: = நெருப்பு, பழுப்பு நிறம், பொன் நிறம், சிவன், கீரி, சுத்தம் செய்பவன், பழுப்பு நிற தலை முடி உடையவன், விஷ்ணு.

2077. ப3ர்ஹ: = ப3ர்ஹம் = வால், இலை, தோகை, பரிவாரம்.

2078. ப3ர்ஹி: = நெருப்பு.

2079. ப3ர்ஹிண: = ப3ர்ஹின் = மயில்.

2080. ப3ர்ஹிஸ் = தர்ப்பைப்புல், நெருப்பு, காந்தி, யாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *