2041. ப்ரேக்ஷா = பார்த்தல், கவனித்தால், தோற்றம், பார்வை, காட்சி, ஆலோசித்தல், ஆராய்ச்சி, மரத்தின் கிளை.
2042. ப்ரோக்த = சொல்லப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட.
2043. ப்ரோத்ஸாஹ: = உற்சாகம், உற்சாகம் ஊட்டுதல்.
2044. ப்ரோக்ஷணம் = தெளித்தல்.
2045. ப்ரௌட4 = முழுவதும் வளர்ந்த, நன்கு பழுத்த, பக்குவம் அடைந்த, வயது வந்த, முற்றின, கெட்டிக்காரனான, திருமணம் ஆன.
2046. ப்ரௌடி4: = முழு வளாச்சி, முழு மலர்ச்சி, கெளரவம், பெருமை, ஊக்கம், உத்சாஹம், துணிச்சல்.,
2047. ப்ளவ = நீந்துதல், மிதத்தல், வெள்ளம், குதித்தல், தெப்பம், படகு, தோணி, ஆடு, தவளை, எதிரி, குரங்கு, சரிவான இடம், மீன் பிடிக்கும் வலை.
2048. ப்ளவங்க3: = குரங்கு, மான், அத்திமரம், ஒரு ஆண்டின் பெயர்
2049. ப்லவங்க3ம: = குரங்கு, தவளை.
2050. ப்ளவனம் = நீந்துதல், மூழ்குதல், குதித்தல், வெள்ளம், பிரளயம், சரிவு.
2051. ப்ளு = மிதக்க, பறக்க, ஊசலாட, நீந்த, பிதுங்கி வெளிவர, மூழ்க, படகில் அக்கரை சேர.
2052. ப2ட: = பாம்பின் விரிந்த படம், வஞ்சகன், பல்.
2053. ப2ண:= பணா = பாம்பின் விரித்த படம்.
2054. ப2ல் = பழம் தர, பழம் உண்டாக, விளைவு தர, பழுக்க.
2055. ப2லம் = பழம், முடிவு, பயன், வெகுமானம், சன்மானம், உத்தேசம், குறிக்கோள், லாபம், பலகை, ஜாதிக்காய், கணிதத்தில் கூட்டல் அல்லது பெருக்கலின் பலன்.
2056. ப2லகம் = பலகை, சிலேட்டு, வழவழப்பான கற்பலகை, மட்டமான தடம், புட்டம், இடுப்பு மூட்டுப்பகுதி, உள்ளங்கை.
2057. ப2லவத் = பழம் தரும், பயன் தரும், லாபம் தரும்.
2058. பல்2கு3 = சாரம் இல்லாத, சிறிய, அற்பமான, பலமற்ற, உபயோகமற்ற,
2059. ப2ல்கு: = வசந்த காலம், ஒரு நதியின் பெயர் பெயர், ஒரு மரத்தின் பெயர்.
2060. பா2ல: = பா2லம் = கலப்பையின் கொழு, தலை வகிடுப் பிரதேசம், நெற்றி.