2001. ப்ராக் = முன்னாள், முதலில், கிழக்கில், எதிரில்.
2002. ப்ராக்ருத = ஸ்வபாவமான, இயற்கையான, நாகரீகம் அற்ற, நாட்டுப்புறத்திய, படிக்காத.
2003. ப்ராங்கணம் = முற்றம், அங்கணம், ஒரு பேரிகை.
2004. ப்ராச் = ப்ராஞ்ச் = முந்திய, முன்னதான, முன் காலத்திய, கிழக்கு திசை தொடர்புள்ள.
2005. ப்ராசீன் = கிழக்கு நோக்கிய, பழமையான, முன்காலத்திய.
2006. ப்ராசேதஸ: = மனு, தக்ஷன், வால்மீகி.
2007. ப்ராஜாபத்ய: = விஷ்ணு, பிரயாகை.
2008. பராக்ஞா = அறிவாளி, கற்று அறிந்தவன்.
2009. ப்ராண: = மூச்சு, காற்று, வலிமை, சக்தி, ஆன்மா, பிராணன்.
2010. ப்ராணநாத: = கணவன், காதலன், யமன்.
2011. ப்ராணந்தி = பசி, விக்கல், விம்மி அழுதல்.
2012. ப்ராணீன் = பிராணி, மனிதன்.
2013. ப்ராதர = விடியற்காலை.
2014. ப்ராதமிக = முதலான, ஆரம்பிக்கும்.
2015. ப்ராந்த: = மூலை, முடிவு, எல்லை, புள்ளி, ஓரம், அருகாமை.
2016. ப்ராப்த = அடையப்பட்ட, கிடைக்கப்பட்ட, சம்பாதிக்கப்பட்ட, பொருத்தப்பட்ட, அனுபவிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட.
2017. ப்ராப்தி: = பெறுதல், அடைதல், காணுதல், கூடுதல், லாபம், அதிர்ஷ்டம், பங்கு, குவியல், சேர்க்கை, பயனுள்ள முடிவு.
2018. ப்ராமாண்யம் = மேற்கோள், நிரூபணம், சாட்சியம், நம்பகத்தன்மை.
2019. ப்ராய: = புறப்பாடு, போதல், மிகுதி, வயது, சாகும்வரை உண்ணாவிரதம்.
2020. ப்ராயச்’சித்தம் = தவறு நீக்கல், தவறிலிருந்து விடுபட செய்யும் சடங்கு.