100. ப்ரஸன்ன to ப்ரஹ்லாத3:

1981. ப்ரஸன்ன = மகிழ்ச்சியடைந்த, திருப்தியடைந்த, தூய்மையடைந்த, சுத்தமான, தெளிவாக்கப்பட்ட.

1982. ப்ரஸப4ம் = பலாத்காரமாக, மிக அதிகமாக.

1983. ப்ரஸவ: = ஈன்றல், பிறப்பு, சந்ததி, குழந்தை, ஆரம்பம், மூலம் , பழம் , பூ, மொக்கு.

1984. ப்ரஸர: = முன் செல்லுதல், பரவுதல், விஸ்தரிப்பு, பரப்பு, கூட்டம், சண்டை, ஓட்டம், பெருக்கு, வெள்ளம்.

1985. ப்ரசாத3: = அனுக்ரகம், கருணை, தயை, தெய்வத்துக்கு படைத்த பிரசாதம், காணிக்கை, தூய்மை, தெளிவு.

1986. ப்ரசித்3த4: = புகழ் பெற்ற, அலங்கரிக்கப்பட்ட.

1987. ப்ரசூதி: = பிரசவம், பிறப்பு, உண்டு பண்ணுதல், சந்ததி, விளைவு, பயன், மலர்ச்சி.

1988. ப்ரஸ்தர: = ப்ரஸ்தார: = படுக்கை, கட்டில், சமபூமி, சமதளம், ரத்தினம்.

1989. ப்ரஸ்தாவ: = முன்னுரை, தொடக்கம், சமயம், தருணம். சந்தர்ப்பம்.

1990. ப்ரஸ்தாவனா = புகழ்தல், ஆரம்பம், முகவுரை, முன்னுரை.

1991. ப்ரஸ்துத = புகழப்பட்ட, செய்யப்பட்ட, ஆரம்பிக்கப்பட்ட, முயற்சி செய்யப்பட.

1992. பரஸ்தானம் = செல்லுதல், பிரயாணம் செய்ய, முறை, மாதிரி, இறப்பு.

1993. ப்ரஸ்ரவணம் = ஓடுதல், வழிந்தோடுதல், நீர்ப் பெருக்கு, நீர்வீழ்ச்சி, வியர்வை, வாய்க்கால், தண்ணீர் வடியும் குழாய் அல்லது நாசி, சிறுநீர் கழித்தல்.

1994. ப்ரஹரணம் = அடித்தல், வெளியே தள்ளுதல், ஆயுதம், சண்டை.

1995. ப்ரஹஸனம் = பரிகாசம், ஏளனம், சிரிப்பு, தமாஷ், ஒரு வகை நாடகம்.

1996. ப்ரஹார : = அடி கொடுத்தல், காயம் ஏற்படுத்துதல், காலால் உதைத்தல்.

1997. ப்ரஹி: = கிணறு.

1998. ப்ரஹ்ருஷ்ட = மகிழ்ச்சியடைந்த, மயிர் கூச்செறியும்.

1999. ப்ரஹேலி: = ப்ரஹேலிகா = விடுகதை, கற்பனைக் கதை.

2000. ப்ரஹ்லாத3: = அதிக மகிழ்ச்சி, சப்தம், ஒரு விஷ்ணு பக்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *