10. உபநிஷத்3 to உமா

181. உபநிஷத்3 = வேத கிரந்தங்கள், ரஹசியமான அறிவு, பரமாத்மாவுடன் சம்பந்தப் பட்ட உண்மை அறிவு, தனிமை.

182. உபன்யாஸ: = அருகில் வைத்தல், ஒன்றின் பக்கத்தில் ஒன்றி இருத்தல், அடகு, பேச்சு, முகவுரை, பிரசங்கம்.

183. உபபுராணம் = சிறிய அல்லது முக்கியத்துவம் குறைந்த புராணம்.

184. உபமானம் = ஒரே உருவமுடைய, சமமான தன்மையுடைய, ஒப்பிட உகந்த, ஒப்புவமை.
(உபமேயம் = ஒப்பிடுவதற்கு உகந்த விஷயம்.)

185. உபயோகம் = பிரயோகம், தொண்டு செய்தல், பணிவிடை செய்தல், தகுதி, பொருத்தம், தொடர்பு.

186. உபரதி: = விரக்தி, வெறுப்பு, அலட்சியம், விடுபடுதல், நிறுத்துதல்.

187. உபலக்ஷணம் = பார்த்தல், பார்வையில் கொண்டுவருதல், கவனித்தால், குறித்தல், குறிப்பிடுதல்.

188. உபவாஸ : = விரதம், உணவு உட்கொள்ளாமல் இருப்பது, யாஹ அக்னியை எரியச்செய்தல்.

189. உபவேத3ம் = ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், ஸ்தாபத்ய வேதம் என்ற நான்கு.

190. உபஸந்தா4னம் = கூட்டுதல், சேர்த்தல்.

191. உபஸ்தா2னம் = அருகில் இருப்பது, நெருங்குவது, அருகாமை, வருகை, பூஜித்தால், சேவித்தல், தொண்டு, வணங்குதல்.

192. உபஹரணம் = எடுத்தல், பிடித்தல், அருகில் கொண்டு வருதல், காணிக்கை செலுத்துதல், உணவு பரிமாறுதல்.

193. உபஹார : = அக்னியில் இடப்படும் ஆஹூதி, வெகுமதி, பலி, காணிக்கை, பரிசு, பூஜா திரவியம்.

194. உபாதா3னம் = மூலப் பொருள், காரணம், பிரயோஜனம், வர்ணனை, எடுத்துக் கொள்ளுதல்.

195. உபாதி4: = வஞ்சனை, கபடம், தந்திரம், அடைமொழி, குலப் பெயர், காரணப் பெயர், குடும்பப் பெயர், புனை பெயர், எல்லை, வரம்பு.

196. உபாய: = உபாயம், முயற்சி யுக்தி, ஆரம்பம்.

197. உபேஷா = அலட்சியமாக இருப்பது, அசட்டையாக இருப்பது, கவனக் குறைவு, விட்டு விடுதல்.

198. உபேந்தி3ர: = விஷ்ணு, கிருஷ்ணன்.

199. உப4ய = இரட்டையான (மனிதர் அல்லது வஸ்து).

200. உமா = ஹிமவான் மகள், சிவனின் மனைவி, ஒளி, பிரகாசம், புகழ், அமைதி, இரவு, மஞ்சள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *