முன்னுரை

சமஸ்க்ருதம் என்றாலே பண்பட்ட (refined ) என்று பொருள்.

தென்மொழிகளில் இந்தத் தொன்மொழியும் கலந்துள்ளது.

ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனையோ பொருட்கள் உள்ளன.

தெரிந்தும், தெரியாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.

தவறாக உச்சரிக்கின்றோம், தவறாக உபயோகிக்கின்றோம்.

அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பொருளையும்

அவற்றின் சரியான உச்சரிப்பையும் தருவதே என் நோக்கம்.

சுமார் 4200 தொன்மொழி வார்த்தைகளைத் தேர்வு செய்து

நம் தென்மொழியில் எளிமையாக அளித்துள்ளேன்.

அகர வரிசைப்படி அமைத்திருப்பதால் எளிதாகத்

தேவையான வார்த்தையைக் கண்டு பிடிக்க முடியும்.

37 thoughts on “முன்னுரை

    • The words as it sounds does not mean anything good.
      I Telugu it means a fallen woman (a prostitute).
      I guess the woman who has lost her Lajja (naaNam)
      becomes a lanja!
      In Tamil lanjam it means bribe.

      • In this கந்தரலங்காரம் song, I would to know the meanings of the words
        நிகராட்சம and விட்சோப. If possible, will you be able to give the meaning of
        the whole song word by word?

        சிகராத்ரி கூறு இட்ட வேலும் செம் சேவலும் செம் தமிழால்

        பகர ஆர்வம் ஈ பணி பாச சங்க்ராம பணாமகுட

        நிகராட்சம பட்ச பட்சி துரங்க ந்ருபா குமரா

        குக ராட்சச பட்ச விட்சோப தீர குணதுங்கனே.
        52

        Thank you.

        Kumaresan

        On Wed, Jan 8, 2014 at 9:51 AM, Sanskrit To Tamil Dictionary wrote:

        > Visalakshi Ramani commented: “nandri en peNNe! 🙂 then mozhiyum, thon
        > mozhiym iNainthaal viLaiyum anivarukkum miguntha nalame! :)”
        >

  1. I would like to learn Nirvana Sathagam in Tamil (Original should be Sanskrit and just the same words in tamil. ). Also It would be great if you provide the the meaning of Nirvana Sathagam in Tamil. Nandri..

    Prakash Periyasaamy
    Email : prakashomr@gmail.com

  2. Thanks for your kind and quick response . The link is very useful for me to learn Satakam…
    You are doing a such great job.. Sanskrit never go down.. Such a wonderful divine language . language..

    Thanks again..
    Prakash Periyasaamy

    • Dear Mr. Prakash,
      Welcome to visit my website.
      http://visalakshiramani.weebly.com/
      I myself am on a spiritual quest!
      I realized that we can’t hurry things.
      When we are ready for the true knowledge,
      it will automatically dawn on us by itself.
      That is why it is called gnaana udayam!
      Mean time we can devote our time, energy
      and thoughts and work towards the gnaana udayam.
      I shall await your comments after you visit my website.
      The home page has the lists of blogs, introduction
      to each of them and the link to navigate to them. 🙂
      You are welcome to share the links with
      your friends and other interested persons.
      This long poem of 100 lines is my autobiography in a nutshell.
      http://visalakshiramani.wordpress.com/a%C2%A0prayer/

      • I do not know either. But I will give you the context below in which it comes, and I am sure you will be able to get which one is applied here. Also please give me the meaning for அநுபாவ்யம் as well in this context.
        “இத்தை (உடலைப்) போக்யமென்று பாரித்து இழிந்தவனுக்கு ஆபாதப்ரதீதியில் ஒன்று போலே தோற்றி, நிரூபித்தால் அநுபாவ்யமாயிருப்பதொன்றுமின்றிக்கே இருக்கை என்னுமாம்.”

    • Thank you for your response. Can you please add to your list here the Tamil meanings for the words aapaada, aabaada, and aapaatha?

      • அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பொருளையும்
        அவற்றின் சரியான உச்சரிப்பையும் தருவதே என் நோக்கம்.
        சுமார் 4200 தொன்மொழி வார்த்தைகளைத் தேர்வு செய்து
        நம் தென்மொழியில் எளிமையாக அளித்துள்ளேன்.
        EVEN if those words exist I have no intention of adding them to my list.

  3. தாயே . இதயம் கனிந்த நன்றி.தங்களின் இப்பணி எனக்கு மிகவும் பேருதவியாக உள்ளது.எனக்கு ஒரு சிறிய பகுதியை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து தருவீர்களா?. சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றியுடன் ஜெயக்குமார்.

    • நான் சமஸ்கிருதம் முறையாகக் கற்றதில்லை என்றாலும் முடிந்த அளவு மொழி பெயர்க்க முயன்று பார்க்கின்றேன். என்னால் முடியவில்லை என்றால் உங்களுக்கு அதைத் தெரிவிக்கின்றேன். நன்றி!

  4. தாயே . மனமார்ந்த நன்றிகள்.
    தெய்வீக பேரன்பு சக்தியால் எமது வாழ்க்கை அழகானது
    அழகான இவ்வற்புத வாழ்க்கையை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம்.
    அழகான இவ்வற்புத வாழ்க்கைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
    அழகான இவ்வற்புத வாழ்க்கையை இவ்வுலக மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறோம்.
    அழகான இவ்வற்புத வாழ்க்கையை இவ்வுலக மக்கள் அனைவரும் பெற்று மகிழ நல்லாசிகள் புரிகின்றோம்.
    .
    தாயே . வாழ்க்கையில் துவண்டு போயிருந்த எனக்கு மேன்மை தாங்கிய எமது குருநாதர் மேற்கண்ட மந்திரத்தை தியானம் செய்யும்படி தந்தருளினார். அன்று முதல் எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியங்களை எளிதில் எழுதிவிட முடியாது.
    .
    சக்தி யோகம் எனும் குருகுலப்பயிற்சியில் இந்த தியானம் எவ்வாறு செய்ய வேண்டும என கற்றுக்கொடுக்கப்படுகிறது. இது தியானத்தின் முதல் பகுதிதான். மொத்தம் அது போல 19 பகுதிகள் உள்ளன.
    . தாயே தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் எனக்கு செய்து தாருங்கள்.அது எனக்கு மட்டுமன்றி பலருக்கும் உபயோகமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
    மானமார்ந்த நன்றியுடன் – ஜெயக்குமார்.

    • இதற்கு ஆங்கிலத்தில் autosuggestion என்பார்கள். திரும்பத் திருப்ப ஒன்றையே நினைக்கும்போதும் சொல்லும்போதும் நாம் அதை முழுமையாக நம்பி விடுகிறோம். இந்த முறையில் மனம், உடல் சம்பந்தமான பல வியாதிகளை குணப்படுத்தலாம். இவ்வளவு நீளமான மந்திரம் தேவை இல்லை.

      “நான் இந்த உடல் அல்ல;
      நான் தூய்மையான ஆத்மா;
      நான் சுத்தன்; நான் சத்தியன்;
      நான் நித்தியன்; நான் நிர்மலன்;
      நான் முழுமையானவன்;
      நான் குறை இல்லாதவன்!”

      இதை நீங்கள் நம்பிக்கையோடு தினமும் கூறுங்கள். அதன் பின்பு நிகழும் அற்புதங்களைப் பாருங்கள். நம்மை பந்தப்படுத்திப் பாடுபடுத்துவதும் மனம். நம்மைக் கவலைகள் இல்லாத பிறவி ஆக்குவதும் அதே மனம்!

      additional reading material:

      Autosuggestion – Wikipedia
      https://en.wikipedia.org/wiki/Autosuggestion
      Autosuggestion is a psychological technique related to the placebo effect, developed by apothecary Émile Coué at the beginning of the 20th century. It is a form of self-induced suggestion in which individuals guide their own thoughts, feelings, or behavior. The technique is often used in self-hypnosis.
      ‎Origins · ‎The birth of autosuggestion · ‎The Coué method · ‎See also

  5. தாயே. மன்னிக்கவும்.
    தாங்கள் குறிப்பிட்டுள்ள Autosuggestion பற்றி என்னாலும் மிக அதிகமாகவே விளக்கம் தர முடியும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அனேகம் பேர் Autosuggestion பற்றி தெரிந்து வைத்துள்ளனர்.
    சில தினங்களுக்கு முன் படித்த செய்தி ” இனி வரும்காலத்தில் மன அழுத்தம் என்கிற வியாதி முதலிடத்தை பிடிக்கும்:” என்பது தான். நீங்கள் பரிந்துரைக்கும் Autosuggestion மூலம் எதையும் நீக்க முடியாது. அது ஒரு தற்காலிக நிவாராணி. இன்றைய நாகரீக உலகில் எல்லா விஷயத்திற்கும் கவுன்சிலிங் என்கிற முறையை பயன்படுத்துகின்றனர்.இந்த கவுன்சிலிங்கில் நீங்கள் பரிந்துரைக்கும்
    Autosuggestion முறையை பின்பற்றும்படியும் மற்றும் புதுபுது பெயர்களில் தூக்க மருந்தினையே தருகின்றனர்.
    இவையெல்லாம் எப்படி எனக்கு தெரியலாம் என நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் நான் ஒரு மருத்துவன்.
    .
    விடுக . தாயே . எனது பதிவு தங்களை பாதித்திருக்கலாம். மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும்.
    எமது குருநாதர் வழங்கிய மந்திரம் எனக்கு மிகவும் புனிதமானது. மேலோட்டமாக இதை பார்த்தால் தாங்கள் பரிந்துரைத்த Autosuggestion போலவே இருக்கலாம். இதன் உட்பொருள் இரகசியங்கள் அனைத்தையும் எமது குருநாதர் எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டார். அதன் இரகசியங்களை தாங்களோடு நான் பகிர்ந்து கொள்ள முடியாது.
    எனினும் தங்களை தாயே என அழைப்பதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் தாயே.
    “தன்னலம் கருதாது அனைவருக்கும் பகிர்பவன் இறைவனே” இது எமது குரு மொழி.
    தமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்படும்படியான சமஸ்கிருதம்- தமிழ் அகராதியை என் போன்றவர்கள் பயன்பெற்ற மேன்மையடைய தாங்கள் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்.?
    பொது மக்களின் மேல் அன்பு இருந்தால் மட்டுமே இது போன்ற காரியத்தை செய்ய முடியும்.
    தன்னலம் கருதாமல் தாங்கள் ஆற்றிய பணியின் காரணமாகவே தங்களை தாயே என மனப்பூர்வமாக அழைக்கின்றேன்.
    மற்றவை தங்களின் பதில் கண்டு- நன்றியுடன் ஜெயக்குமார்.

  6. தாயே. வணக்கம்.
    எமது பதிவுகளுக்கு உடனே பதிலுரைத்தமைக்கு நன்றி.
    எனினும் எமது வேண்டுகோளை தவிர்த்து மற்ற விஷயங்களையே தாங்கள் கூறுகிறீர்கள். அதற்கும் நன்றி.
    ஏனேனில் இக்கணம் முதல் சமஸ்கிருதத்தை கற்று கொள்வது என முடிவு செய்து விட்டேன். அதற்கு நீங்களும் ஒரு காரணம். ஆகையால் உங்களுக்கும் நன்றி. ( இது போல் பலர் உள்ளனர் )
    தாங்கள் பதிவிட்டுள்ள சமஸ்கிருதம்- தமிழ் அகராதியும் எனக்கு துணையாக இருக்கும். அதற்கும் நன்றி.
    சமஸ்கிருதத்தை நன்கு கற்க தங்களின் நல்லாசிகளை தந்தருளுங்கள் . நன்றியுடன் ஜெயக்குமார்.

    • உங்கள் கடிதத்தின் ஒரு பகுதி இது.

      “எமது குருநாதர் வழங்கிய மந்திரம் எனக்கு மிகவும் புனிதமானது. மேலோட்டமாக இதை பார்த்தால் தாங்கள் பரிந்துரைத்த Autosuggestion போலவே இருக்கலாம். இதன் உட்பொருள் இரகசியங்கள் அனைத்தையும் எமது குருநாதர் எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டார். அதன் இரகசியங்களை தாங்களோடு நான் பகிர்ந்து கொள்ள முடியாது.”

      என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியமான உபதேசங்களை என்னால் மொழிபெயர்க்க முடியும் என்று எப்படி நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

      உங்கள் உறுதியையும், முனைப்பையும் மனதாரப் பாராட்டுகின்றேன்.

      வாழ்க வளமுடன்! உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய என் நல் வாழ்த்துக்கள்!

  7. பெ4ளி சொக்கட் லிக்கிராஸ் பெ4ளி ஸொம்புகன் லக3ரேஸ். த4ந்நு

    மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

  8. Namaskaram Amma,

    Have compiled your blog Sanskrit to Tamil in PDF and hosted in the below link…

    Request to upload the PDF in this blog as it will be useful for users to take print and read…

    Sivoham!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *